ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 Feb 2021 7:41 PM GMT (Updated: 2021-02-17T01:11:58+05:30)

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தினர், சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் நேற்று பெரம்பலூர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், அன்னமங்கலம் பகுதியில் அடுத்த மாதம்(மார்ச்) 14-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கிராம மக்கள் மற்றும் விழாக்குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி அளித்து, போலீஸ் பாதுகாப்பு வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story