சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Feb 2021 7:53 PM GMT (Updated: 2021-02-17T01:23:25+05:30)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர்
கரூரில் நேற்று வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு, கல்லூரி தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.  கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னரில் தொடங்கி திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர் வழியாக சென்று கரூர் தலைமை தபால் நிலையத்தில் ஊர்வலம் முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது, தலை உனது உறுப்பு, தலைக்கவசம் உனது பொறுப்பு, ஓய்வின்றி தொடர்ந்து வாகனம் ஓட்டாதீர் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்தி சென்றனர். இதில், தமிழ்நாடு ஊர்க்காவல் படை சிவக்குமார், டி.ஆர்.வி. ஜூவல்லரி வெங்கட், டி.என்.என்.ஜூவல்லரி ஹரி, பூ.பா.செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் புஷ்பராஜ், ரோஷன் மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story