திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றிபெற சூளுரைப்போம்; பரஞ்ஜோதி தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றிபெற சூளுரைப்போம்; பரஞ்ஜோதி தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Feb 2021 9:38 PM GMT (Updated: 2021-02-17T03:08:14+05:30)

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றிபெற சூளுரைப்போம் என்று பரஞ்ஜோதி தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில்
4 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றிபெற சூளுரைப்போம்
பரஞ்ஜோதி தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி, 
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, பகுதி, நகர், பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சி தில்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். இதில் மாநில அமைப்பு செயலாளரான அமைச்சர் வளர்மதி, மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்.எல்.ஏ.க்கள் செல்வராசு, பரமேஸ்வரி, அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல், பொருளாளர் சேவியர், முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவி, பூனாட்சி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் பொன்.செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, வருகிற 24-ந் தேதி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்குவது. கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்ததுடன், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்த முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும், சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக்கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெற்று முதல்-அமைச்சர் பொற்கரங்களில் சமர்பிப்பது என்று சூளுரை ஏற்போம் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story