கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி


கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Feb 2021 9:46 PM GMT (Updated: 2021-02-17T03:16:06+05:30)

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

தாயில்பட்டி, 
மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35).  இவர் ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். இந்தநிலையில் அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை, அவரது நண்பர்கள் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து  உடனடியாக வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 5 மணி நேரம் போராடி முத்துபாண்டியின் உடலை மீட்டனர். இறந்த முத்துப்பாண்டிக்கு மனைவியும், 6 வயதில் சரண்யா என்ற மகளும், 8 வயதில் அனித் என்ற மகனும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story