கிராம உதவியாளர்கள் கையெழுத்து போராட்டம்


கிராம உதவியாளர்கள் கையெழுத்து போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2021 10:07 PM GMT (Updated: 2021-02-17T03:37:44+05:30)

கிராம உதவியாளர்கள் கையெழுத்து போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், 
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் குருநாகப்பன் தலைமை தாங்கினார். வட்ட கிளை செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள கிராம உதவியாளர் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் சமுத்திரராஜ் மாவட்ட இணைச் செயலாளர் ரத்தினகுமார் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். 

Next Story