சேலத்தில் கடையில் ரூ.55 ஆயிரம் திருட்டு


சேலத்தில் கடையில் ரூ.55 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 16 Feb 2021 10:49 PM GMT (Updated: 2021-02-17T04:21:20+05:30)

சேலத்தில் கடையில் ரூ.55 ஆயிரம் திருட்டு.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 60). இவர் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை பார்த்த போது கடையில் இருந்த ரூ.55 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இரவில் மர்ம நபர்கள் கடையின் மேல் பகுதியை பிரித்து உள்ளே இறங்கி பணத்தை திருடிச்சென்று உள்ளனர். இது குறித்து அவர் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Next Story