வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பரமக்குடி,
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கக்கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி பரமக்குடி கிளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் செய்து தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமீம் ராஜா, மாவட்ட இணை செயலாளர்கள் பரமசிவன், சுந்தர்ராஜன், காசிநாதர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஹரி சதீஷ்குமார் வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட கிளை துணைத்தலைவர் வேலவன், செயலாளர் கோகுல்நாத், பொருளாளர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் பேசினர்.
Related Tags :
Next Story