‘புன்னகையைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம் 31 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


‘புன்னகையைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம் 31 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
x
தினத்தந்தி 17 Feb 2021 3:00 PM GMT (Updated: 2021-02-17T20:30:30+05:30)

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ‘புன்னகையைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம் 31 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வேலூர்

புன்னகையை தேடி திட்டம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர். 

மேலும் இதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

31 குழந்தை தொழிலாளர்கள் மீட்
பு

அந்தக் குழுவினர் புன்னகையைத் தேடி (ஆபரேஷன் ஸ்மைல்) என்ற திட்டத்தின் கீழ் வாகனங்களில் மாவட்டம் முழுவதும் சென்று குழந்தைகள் மீட்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் 3 மாவட்டங்களில் கடந்த 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்கொண்ட மீட்பு பணியில் 31 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Next Story