கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம்


கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2021 3:09 PM GMT (Updated: 2021-02-17T20:39:42+05:30)

கோவில்பட்டி ரெயில் நிலையம் பயணிகள் காத்திருக்கும் அறையில் ரெயில்வே ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையம் பயணிகள் காத்திருக்கும் அறையில் ரெயில்வே ஓய்வு பெற்ற ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்க செயலாளர் தங்கவேல் வரவேற்று பேசினார். ரெயில் நிலைய அதிகாரி கிருஷ்ணசாமி, சங்க முன்னாள் உதவி தலைவர் ஆதிமூலம், கேக் மேஸ்திரி கிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் விருதுநகர் கிளை செயலாளர் தாவூத், மதுரை கோட்ட ரெயில்வே ஓய்வூதியர் சங்க செயலாளர் தீனதயாளன் ஆகியோர் பேசினார்கள். ஓய்வு பெற்ற ரெயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஹரிஹரசுப்பிரமணியன் தீர்மானங்களை வாசித்தார். ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வாங்கும் அனைவருக்கும் சட்டப்படி இலவச பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் முருகையா நன்றி கூறினார்.


Next Story