நாகை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது


நாகை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
x
தினத்தந்தி 17 Feb 2021 5:29 PM GMT (Updated: 17 Feb 2021 5:29 PM GMT)

கொரோனா தடுப்பு பணியில் நாகை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் கூறினார்.

நாகப்பட்டினம்;
கொரோனா தடுப்பு பணியில் நாகை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் கூறினார். 
ஆய்வு
நாகை அரசு மருத்துவக்கல்லூரி, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் அஜய்யாதவ் கொரோனா தடுப்புபணிகள், மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி  ஆகியவற்ற கலெக்டர் பிரவீன் நாயர் முன்னிலையில் ஆய்வு செய்தார். பின்னர் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் அஜய்யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:- 
கட்டுமான பணி
கொரோனா தடுப்பூசி பணியில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மருத்துவர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வின் அடிப்படையில் மருத்துவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. நாகை அரசு மருத்துவமனை, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 
தடுப்பூசி
மேலும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் முன்களப்பணியாளர்கள், போலீசாருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை 2 ஆயிரத்து 700 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாகை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார். அப்போது  மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் உள்பட பலர் இருந்தனர்.

Next Story