ஓய்வுபெற்ற ெரயில்வே ஊழியர் அடித்துக்கொலை


ஓய்வுபெற்ற ெரயில்வே ஊழியர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2021 6:20 PM GMT (Updated: 2021-02-17T23:50:12+05:30)

நன்னிலம் அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரை அடித்துக்கொலை செய்த டீக்கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நன்னிலம்:
நன்னிலம் அருகே ஓய்வுபெற்ற  ரெயில்வே ஊழியரை அடித்துக்கொலை செய்த டீக்கடைக்காரரை  போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சலிப்பேரி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் சுகுமார்(வயது61). இவர் ரெயில்வே துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அதேபகுதியை சேர்ந்தவர் மாங்கோட்டை செந்தில்(50). இவர் அதேபகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். 
அடித்துக்கொலை 
இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு செந்தில் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாலையில் சுகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென செந்தில், சுகுமாரை கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுகுமார் பரிதாபமாக இறந்தார்.  
தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
வலைவீச்சு
இதுகுறித்து நன்னிலம் போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் செந்தில்   மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
 மேலும் தலைமறைவான செந்திலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இறந்த  சுகுமாருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story