மாடுகள் திருடிய 2 பேர் கைது


web photo
x
web photo
தினத்தந்தி 17 Feb 2021 6:32 PM GMT (Updated: 2021-02-18T00:02:58+05:30)

மாடுகள் திருடிய 2 பேர் கைது

கரூர்
கரூர் அருகே உள்ள வடக்கு பாளையத்தை சேர்ந்தவர் காளியண்ணன்(வயது 74). இவர் மாடுகளை வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளை மர்மநபர்கள் பிடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து காளியண்ணன் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் உப்பிடமங்கலத்தை சேர்ந்த பாலுசாமி(45) மற்றும் கரூர் திருவிகா ரோட்டை சேர்ந்த மணி(34) ஆகிய இருவரும் சேர்ந்து மாடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story