அரசு டாக்டர்கள் போராட்டம்


அரசு டாக்டர்கள் போராட்டம்
x

அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்

சிவகங்கை
முதுநிலை பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகைள வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நேற்று முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டத்தை தொடங்கினர். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் நாச்சியப்பன், கார்த்தீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது, 
அரசு மருத்துவர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு முதுநிலை பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான சட்ட மசோதா, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்குதல், வெளிப்படையான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.  2 வாரங்களுக்கு கோரிக்கை அட்டை அணிந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவர்கள் பணிபுரிவார்கள். கொரோனா போன்ற கொடிய மருத்துவ பேரிடர் காலத்தில் 24 நேரமும் பணி செய்து மக்களுக்கு பாதுகாப்பாக விளங்கிய அரசு மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது அரசின் கடமையாகும். மேலும் கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்களுக்காக வெளியிட்ட சிறப்பு ஊதியம் உள்ளிட்ட இழப்பீடுகள் கானல் நீராகவே உள்ளது. மேலும் வருகிற 28-ந்தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story