அண்ணன் இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


அண்ணன் இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2021 12:34 AM IST (Updated: 18 Feb 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெரியகரடியூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் வைஷியா (வயது 12). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி மாணவியின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் துக்கம் தாங்காமல் இருந்த மாணவி வைஷியா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
1 More update

Next Story