மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு


மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 18 Feb 2021 1:04 AM IST (Updated: 18 Feb 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு

 ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூரில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். 7 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் வரை பல மாவட்டங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். கத்தா, குமித்தே, குத்துச்சண்டை, உதையாட்டம், சிலம்பம், வாள் வீச்சு, கராத்தே என 7 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் சிலம்பூர் அரசு பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் 21 பேர் கலந்து கொண்டனர். இதில், 11-ம் வகுப்பு மாணவி சந்தியா சிலம்பத்தில் இரண்டாம் பரிசும், 9-ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ கராத்தேவில் முதலிடமும், 9-ம் வகுப்பு மாணவி ரோஷினி கத்தாவில் இரண்டாம் இடமும், 11-ம் வகுப்பு மாணவி கவுரி சங்கரி முதல் இடமும், வாள் சண்டையில் 11-ம் வகுப்பு மாணவி சங்கீதா மூன்றாம் இடமும், குமித்தே போட்டியில் 10-ம் வகுப்பு மாணவர் திருமுருகன் முதலிடமும், உதையாட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவன் கவுதம் மூன்றாம் இடமும் பெற்றனர். மேலும், 9-ம் வகுப்பு மாணவர்கள் தனுஷ், மனோஜ் ஆகியோர் உதைஆட்டத்தில் முதல் இடமும், 9-ம் வகுப்பு மாணவர்கள் பிரவீன், பிரசாந்த் குத்துச்சண்டையில் முதல் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் சரவணனையும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர்மக்கள் வெகுவாக பாராட்டினர்.
1 More update

Next Story