பிரகதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம்


பிரகதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம்
x
தினத்தந்தி 17 Feb 2021 7:34 PM GMT (Updated: 17 Feb 2021 7:34 PM GMT)

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மீன்சுருட்டி
பிரம்மோற்சவ விழா
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரசித்த பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் நடைபெறும் அன்னாபிஷேகம் பிரசித்தி பெற்றவையாகும்.
இதேேபால, இந்தகோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர், பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதனைத்தொடர்ந்து சிறப்பு வேள்வி பூஜைகளும் நடத்தப்பட்டன.
25-ந் தேதி தேரோட்டம்
விழாவில், ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடிேயற்று விழாவை தொடர்ந்து தினமும் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 23-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும், 25-ந் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story