தென்காசி கலெக்டர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை


தென்காசி கலெக்டர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Feb 2021 7:45 PM GMT (Updated: 2021-02-18T01:15:34+05:30)

தென்காசி கலெக்டர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்

தென்காசி:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, வெளியாட்கள் சிலர் சாதியை கேட்டு திட்டி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

 இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பள்ளி மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து சென்றனர். 

Next Story