பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்


பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 17 Feb 2021 8:18 PM GMT (Updated: 2021-02-18T01:48:16+05:30)

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் நகரில் உள்ள வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பால்குடம் கோவில் வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினர். தொடர்ந்து சுவாமி வீதி உலா மற்றும் கோவில் வளாகத்தில் இசை கச்சேரியும் நடைபெற்றது.

முதல்நாள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜ் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமுதாயத்தினர் திருவிழாக்கள் நடத்துகின்றனர்.

Next Story