தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2021 8:30 PM GMT (Updated: 2021-02-18T02:00:05+05:30)

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் மகன் கருப்பசாமி (வயது 22). இவர்கள் தற்போது கேரளாவில் வியாபாரம் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கருப்பசாமி அண்ணன் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அன்று மாலை கருப்பசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாய் சத்தம் போட்டதாக தெரிகிறது. ஆதலால் கருப்பசாமி தூக்்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story