அரசு துறை சார்ந்த பதவி உயர்வுக்கான தேர்வு: ஈரோட்டில் 210 பேர் எழுதினர்

அரசு துறை சார்ந்த க்கான தேர்வை ஈரோட்டில் 210 பேர் எழுதினர்.
ஈரோடு
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம், தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 152 வகையான துறை சார்ந்த வல்லுனர்களுக்கான தேர்வு கடந்த 14-ந்தேதி முதல் வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது. 152 துறைகளை சேர்ந்த 1 லட்சத்து 37 ஆயிரத்து 721 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
ஈரோட்டில், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வள்ளலார் மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய பள்ளிக்கூடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தினந்தோறும் பல்வேறு துறை சார்ந்த, ஒரே பதவியில் பணி செய்வோருக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை நேற்று 210 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஆர்.டி.ஓ., சைபுதீன் ஆகியோர் ஆய்வு செய்தனர். துறை சார்ந்த தேர்வு எழுதி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு, அவர்களுக்கு பணிவரன் செய்யப்படும்.
Related Tags :
Next Story