கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு


கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு
x
தினத்தந்தி 18 Feb 2021 1:14 AM GMT (Updated: 2021-02-18T06:46:53+05:30)

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு.

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் வடக்கு காடு 2-வது வார்டு பகுதியில் வசிப்பவர் சத்தியமூர்த்தி (வயது 30). இவர் நேற்று காலை 11 மணியளவில் தனது விவசாய தோட்டத்திற்குச் சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். அப்போது அவர் அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எவ்வளவு அளவு உள்ளது என்பதை பார்க்க கிணற்றில் எட்டி பார்த்துள்ளார். 

அப்போது எதிர்பாராவிதமாக சத்தியமூர்த்தி கிணற்றில் தவறி கீழே விழுந்து தண்ணீரில் தத்தளித்தார். சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 30 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த வாலிபரை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

Next Story