திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரி தற்கொலை கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் விரக்தி
கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் விரக்தி அடைந்த திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தூய தேவி (வயது 38). திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரியான இவர் தனது கணவர் பிரகாசுடன் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகா ரெட்டி தெருவில் வசித்து வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர் பிரகாஷ் காண்டிராக்டராக பணியாற்றி வருகிறார்.
ரூ.30 லட்சம் கடன்
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. இதில் காண்டிராக்டர் தொழிலும் பாதிக்கப்பட்டு பிரகாஷ் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த தூயதேவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story