மாவட்ட செய்திகள்

குடிசை தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் நாசம் + "||" + Destroyed items in cottage fires

குடிசை தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் நாசம்

குடிசை தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் நாசம்
குடிசை தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சம்பந்தமூர்த்தி(வயது 55). விவசாயி. நேற்று காலை இவர் வயல் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உயர் மின்னழுத்தம் காரணமாக, குடிசை வீட்டின் உள்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அருகில் இருந்த பொதுமக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், டி.வி., கிரைண்டர், மின்விசிறி, மேஜையில் வயல் வேலைக்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ஆகியவை எரிந்து நாசமானது. இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம்
2. குடிசை தீயில் எரிந்து நாசம்
குடிசை தீயில் எரிந்து நாசம்