அகழ்வாராய்ச்சிக்காக தூய்மை பணிகள் தீவிரம்


அகழ்வாராய்ச்சிக்காக தூய்மை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 19 Feb 2021 1:18 AM IST (Updated: 19 Feb 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே அகழ்வாராய்ச்சி பணிக்காக தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

மீன்சுருட்டி:
தொல்லியல் துறை மூலம் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்சிக்காக தொல்லியல் துறை மூலம் மாளிகைமேடு உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நேற்று மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடாக, அப்பகுதியில் மண்டிக்கிடந்த புல், புதர்களை அகற்றி தூய்மை செய்யும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக சுற்றியுள்ள 18 கிலோ மீட்டர் சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு மேற்கொள்வதற்காக அப்பகுதிகளில் மண்டிக்கிடக்கும் புல் புதர்களை அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளை தொல்லியல் துறை அலுவலர்கள் நந்தகுமார், பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.

Next Story