மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
வி.கைகாட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வி.கைகாட்டி:
தொழிலாளி
அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்திக்(வயது 31). இவர் இப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வேலை முடிந்த பின்னர், அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ரெட்டிபாளையம்- நாயக்கர்பாளையம் வளைவில் திரும்பியபோது சாலை ஓரத்தில் உள்ள பனைமரத்தில் கார்த்திக் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
சாவு
இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திக்கிற்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story