கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி கல்வி அதிகாரியிடம் மனு
கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி கல்வி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநில துணை தலைவர் சரவணன் மற்றும் சங்கத்தை சேர்ந்தவர்கள், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜனிடம் ஒரு மனு அளித்தனர். அதில், அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஒருவர், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணியாளர் விரோதப் போக்கினை கடைப்பிடித்து வருவதால், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. அவர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை கேட்டு காத்திருக்கும் மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என்று அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story