தாரமங்கலம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் கைது


தாரமங்கலம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2021 5:50 AM IST (Updated: 19 Feb 2021 5:53 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் கைது.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி சேலம் கோரிமேட்டில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் இளங்கோவன் (வயது 19) திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக தாரமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் இளங்கோவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திச்சென்றதுடன், அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர். மேலும் மாணவியையும் போலீசார் மீட்டனர்.

Next Story