மாவட்ட செய்திகள்

ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம் + "||" + Intensification of long-standing debris removal work in Urapakkam panchayat

ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்
ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதை ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் அருகே உள்ள அரசு இடத்தில் கொட்டி தேக்கி வைத்திருந்தனர்.

இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பரவும் ஆபத்து இருந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்ற தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆய்வு

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவுபடி ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கருணாகரன் தலைமையில் ஊராட்சி துப்பரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை லாரி மூலம் ஏற்றி சிங்கப்பெருமாள்கோவில் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. குப்பைகள் அகற்றும் பணியை செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பணிக்கு வந்த இடத்தில் தொற்று: கொரோனா பாதித்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கார் ஓட்டிய கலெக்டர்
தேர்தல் பணிக்கு வந்த இடத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான வடமாநில ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கார் ஓட்டி, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மதுரை கலெக்டர் அன்பழகன் சேர்த்தார். இதனால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
2. தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குவதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
4. வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் ஊழல் குறையும்: குடிமராமத்து பணி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்
அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் குடிமராமத்து திட்டப்பணி விவரங்கள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. தாமிரபரணி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட குறுக்குத்துறை முருகன் கோவிலில் தூய்மை பணி
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட குறுக்குத்துறை முருகன் கோவிலில் தூய்மை பணி நடைபெற்றது.