திருவள்ளுரில் 19 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு இழப்பீட்டுத் தொகை ரூ.18 லட்சம் வசூல்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அமலாக்க அதிகாரிகள் காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருவள்ளுர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 19 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.16 லட்சத்து 98 ஆயிரத்து 325 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அமலாக்க அதிகாரிகள் காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருவள்ளுர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 19 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ.16 லட்சத்து 98 ஆயிரத்து 325 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரச கூடுதல் தொகை ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் சேர்த்து ரூ.18 லட்சத்து 35 ஆயிரத்து 325 செலுத்தியதால் அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94458-57591 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவல்களை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.