தேனி மாவட்ட கலெக்டர் இடமாற்றம்


தேனி மாவட்ட கலெக்டர் இடமாற்றம்
x
தினத்தந்தி 19 Feb 2021 10:10 PM IST (Updated: 19 Feb 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேனி,

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும், அரசு துறை பிற அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், சென்னையில் நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு பதிலாக, தமிழக நிதித்துறை இணை செயலாளர் கிருஷ்ணன் உன்னி, தேனி மாவட்டத்துக்கான புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று பிறப்பித்தார்.

பல்லவி பல்தேவ் தேனி மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்ற சிறப்பை பெற்றவர். அவர் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி தேனி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணன் உன்னி, தேனி மாவட்டத்தின் 16-வது கலெக்டர் ஆவார்.

Next Story