மாவட்ட செய்திகள்

உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாள் விழா + "||" + UVSaminatha Iyer Birthday Celebration

உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாள் விழா

உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாள் விழா
உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
உடையார்பாளையம்:
உடையார்பாளையத்தில் தமிழ் சங்கம் சார்பாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உடையார்பாளையத்தில் வாழ்ந்து தமிழ் பணியாற்றிய ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கங்காதேவி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் லெனின் முன்னிலை வகித்தார். பாவை சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் தஸ்தகீர் கலந்து கொண்டு உ.வே.சா. இளமை காலத்தில் உடையார்பாளையம் சமஸ்தானத்தில் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றியதை பற்றியும், ஓலை சுவடிகளை ஆராய்ந்து புதுப்பிக்க அவர் பட்ட இன்னல்களையும் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திடீர் மோதல்; 3 பேர் கைது
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
3. திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
திருவாரூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் நடந்தது.
4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
5. நாகை மாவட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
நாகை மாவட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது.