புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 2:08 AM IST (Updated: 20 Feb 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரியலூர்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சீனிவாசன், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனராகவும், சென்னை பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 13-வது பட்டாலியன் கமாண்டராக பணிபுரிந்து வந்த வீ.பாஸ்கரன் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தின் 11-வது போலீஸ் சூப்பிரண்டாக பாஸ்கரன் நேற்று, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரை போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story