மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருட்டு


மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Feb 2021 3:01 AM IST (Updated: 20 Feb 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.


மணப்பாறை, 
மணப்பாறை அருகே உள்ள பொய்கைத்திருநகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 50). ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் சாந்தி தனது வீட்டை பூட்டி விட்டு மணப்பாறையில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கி இருந்தார். நேற்று தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த 2 பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் திருட்டு போயிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story