4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம்


4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 20 Feb 2021 5:32 PM IST (Updated: 20 Feb 2021 5:32 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ேவலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தில் கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். 

மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும். 

பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

இந்த தொடர் போராட்டத்தினால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், உதவி கோட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் பல்வேறு கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் அலுவலர்கள் இல்லாததால் திரும்பி சென்றனர்.

Next Story