கேரட் கழுவும் 4 எந்திரங்களுக்கு ‘சீல்’


கேரட் கழுவும் 4 எந்திரங்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 20 Feb 2021 8:32 PM IST (Updated: 20 Feb 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் கேரட்டுகளை அறுவடை செய்து, சுத்தம் செய்ய வசதியாக ஊட்டி, கேத்திபாலாடா, முத்தொரை ஆகிய பகுதிகளில் எந்திரங்கள் இருக்கின்றன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகள் கேரட்டுகளை அறுவடை செய்து, சுத்தம் செய்ய வசதியாக ஊட்டி, கேத்திபாலாடா, முத்தொரை ஆகிய பகுதிகளில் எந்திரங்கள் இருக்கின்றன. 

ஆனால் கேரட்டுகளை சுத்தம் செய்த பிறகு கழிவுநீரை நேரடியாக நீர்நிலைகளில் விடுவதால், அவை மாசடைவதாக புகார் எழுந்தது. இதனால் கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளில் விட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி கேத்தி பாலாடா பகுதியில் கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளில் விடாததால், 4 கேரட் கழுவும் எந்திரங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Next Story