தந்தை திட்டியதால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
கல்லூரிக்கு செல்லுமாறு கூறி தந்தை திட்டியதால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமங்கலம்:
விஷம் குடித்தார்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல்(வயது 42). விவசாயி. இவரது மகன் செல்வகுமார்(19). இவர் பெரம்பலூரை அடுத்துள்ள குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்வேல், கல்லூரிக்கு செல்லுமாறு கூறி செல்வகுமரை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த செல்வகுமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
சாவு
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் செந்தில்ேவல் கொடுத்த புகாரின்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story