மாவட்ட செய்திகள்

வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு + "||" + jewelery theft at home

வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் இருந்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அரியலூர்:
அரியலூரில் ஜெ.ஜெ. நகரில் வசிப்பவர் திரவியம். இவர் முடிதிருத்தும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுமதி. நேற்று முன்தினம் சுமதி வீட்டை பூட்டி விட்டு ரேஷன் பொருட்கள் வாங்க அருகில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்த திரவியம், முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, வீட்டில் நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
2. வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகள் திருட்டு
லப்பைக்குடிக்காட்டில் பட்டப்பகலில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
3. கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகள் திருட்டு
கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. பெரியபாளையம் அருகே பெண் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு; 2 பேர் கைது
பெரியபாளையம் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் திருடியதாக உறவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.