மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 20 Feb 2021 6:45 PM GMT (Updated: 20 Feb 2021 6:45 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் கண் மருத்துவர், முடநீக்கியல் மருத்துவர் என பல்வேறு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டைக்கு பரிந்துரை செய்தனர். இதில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தேசிய அடையாள அட்டைகள், சக்கர நாற்காலி, தள்ளுவண்டி, 3 சக்கர மோட்டார் பொருத்திய வண்டி வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பல மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். முகாமில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் செந்தில்குமார், எலும்பு முறிவு மருத்துவர் ராஜா, மனநல மருத்துவர் அன்பழகி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story