கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி


கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி
x
தினத்தந்தி 21 Feb 2021 12:59 AM IST (Updated: 21 Feb 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுவரில் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. 
பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கொரத்தக்குடி மற்றும் புதூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளின் சுற்றுச்சுவரில் ஓவியங்கள் வரையும் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை வட்டார கல்வி அலுவலர் சாந்திராணி தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அமுதா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.600, இரண்டாவது பரிசாக ரூ.500, மூன்றாவது பரிசாக ரூ.400 ஆகியவற்றுக்கான காசோலைகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

Next Story