234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு முடிவு


234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு முடிவு
x
தினத்தந்தி 21 Feb 2021 1:16 AM IST (Updated: 21 Feb 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகொண்டான் கிராமத்தில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் கலந்தாலோசனை கூட்டம், அமைப்பின் தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக மொத்தம் 18 தொகுதிக்கு நேற்று வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். மேலும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயார் என்றும், சட்டவிரோதமாக சொத்துகள் குவித்திருப்பது கண்டறியப்பட்டால் அதனை நாட்டுடமை ஆக்கவும் உறுதி அளிக்கிறோம், என்று தெரிவித்தனர். மேலும் தேர்தல் வெற்றிக்கு பின் மாவட்ட வளர்ச்சிக்கு என தனி பட்ஜெட் சட்டசபையில் கொண்டு வரப்படும் என்பது உள்ளிட்ட மொத்தம் 131 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தனர். அவற்றை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என வயல்களில் உள்ள நெற்கதிர்கள் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க சங்க தலைவர் லெனின், அமைப்பின் பொருளாளர் வரதராஜன் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story