பள்ளி சுற்றுச்சுவர்களில் ஓவியம்
பள்ளி சுற்றுச்சுவர்களில் மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.
ஆண்டிமடம்:
ஆண்டிமடம் அருகே சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி மரம் வளர்க்க மரக்கிளைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி, மரக்கிளைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பூவரசு, முருங்கை, வேம்பு போன்ற மரக்கிளைகள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவர்கள் பள்ளி சுற்றுச்சுவர்களில் மழைநீர் சேமிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி விளக்கும் ஓவியங்களை வரைந்தனர். மாணவர்களை, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story