கொட்டாய் மேடு கிராமத்தில் கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்


கொட்டாய் மேடு கிராமத்தில் கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:01 PM IST (Updated: 21 Feb 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

கொட்டாய் மேடு கிராமத்தில் கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்.

கொள்ளிடம், 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சியை சேர்ந்த கொட்டாய்மேடு கிராமம் மீன்பிடி தொழிலாளி குப்பண்ணசாமி என்பவரின் கூரைவீடு, மின் கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் கூரைவீடு மற்றும் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகா‌‌ஷ் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் வீட்டை இழந்த தொழிலாளி குப்பண்ணசாமி மனைவி திவ்யாவிடம் ரொக்கம் மற்றும் மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா தர்மலிங்கம், உறுப்பினர்கள் ராமமூர்த்தி, முருகன், விக்ரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story