திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 2:40 AM IST (Updated: 22 Feb 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

செம்பட்டு,
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் நடந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தனர். அவர்களை திருச்சி விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்சோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காலை 8.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றனர்.

Next Story