சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு பெசன்ட் நகரில் மினி மாரத்தான் ஓட்டம்


சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு பெசன்ட் நகரில் மினி மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 5:41 PM IST (Updated: 22 Feb 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு பெசன்ட் நகரில் மினி மாரத்தான் ஓட்டம் கூடுதல் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்- பதிப்பாளர் சங்கம் சார்பில் (பபாசி) 44-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இதனை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த புத்தக கண்காட்சியை முன்னிட்டு ‘ரன் டூ ரீட் (வாசிப்பை நோக்கி ஓடு) என்ற தலைப்பில் மினி மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நேற்று காலை நடைபெற்றது.

இதனை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘சென்னை புத்தக கண்காட்சி அறிவை வளர்ந்துக்கொள்ள துடிப்பவர்களுக்கு சிறந்த இடம் ஆகும். எனவே அனைவரும் சென்னை புத்தக கண்காட்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி. திருநாவுக்கரசு, ‘பபாசி’ தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் அ.கோமதிநாயகம் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story