சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை ஓட்டேரி மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரு.வி.க. நகர்,
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை ஓட்டேரி மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து வைத்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு திரு.வி.க.நகர் தொகுதி தலைவர் அப்துல்கபூர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.அப்துல் கரீம், மாவட்ட செயலாளர் ஆதம் மொய்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜியாவுல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story