வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமிர்தவள்ளி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் குப்பு கோரிக்கை குறித்து பேசினார்.
போராட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அகவிலை உடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவித்திட வேண்டும். பணி ஓய்வு பெறுகின்ற போது பணி கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story