காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் சாவு


காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் சாவு
x
தினத்தந்தி 22 Feb 2021 8:48 PM IST (Updated: 22 Feb 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரி. இவர் தன்னுடன் சித்தாள் பணிக்காக மகாத்மா காந்தி சாலையை சேர்ந்த இந்திரா (35) என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில், காஞ்சீபுரத்தில் ஒரு கட்டுமான பணியை முடித்து விட்டு மாலை வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

மாகரல் போலீஸ் நிலையம் அருகே இவர்கள் சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இந்திரா படுகாயம் அடைந்தார்.

சாவு

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story