அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்


அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 9:10 PM IST (Updated: 22 Feb 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி:

தேனி மாவட்டத்தில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, "தேனி மாவட்டத்தில் தற்போது 1,221 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 340 வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

 புதிதாக அமைக்கப்பட உள்ள துணை வாக்குச்சாவடிகளில் 364 வாக்குச்சாவடிகள் அதே இடத்திலும், 76 வாக்குச்சாவடிகள் வேறு இடத்திலும் அமைய உள்ளது. 

வாக்குச்சாவடிகள் மாற்றம் தொடர்பான கோரிக்கைகள் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலர், பெரியகுளம் சப்-கலெக்டர், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் மனு அளிக்கலாம்" என்றார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கார்த்திகாயினி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story