விழிப்புணர்வு ஓவியப்போட்டி


விழிப்புணர்வு ஓவியப்போட்டி
x
தினத்தந்தி 23 Feb 2021 12:36 AM IST (Updated: 23 Feb 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

உடையார்பாளையம்:
உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் சுவற்றில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் போட்டி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி.சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். கொரோனா ெதாற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது, பெண் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பள்ளி சுவற்றில் ஓவியங்களை ஆர்வமாக வரைந்தனர். உதவி ஆசிரியர்கள் மலர்க்கொடி, கனிமொழி ஆகியோர் சிறந்த 3 ஓவியங்களை தேர்வு செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.600, இரண்டாவது பரிசாக ரூ.500, மூன்றாவது பரிசாக ரூ.400 வழங்கப்பட்டது. சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
1 More update

Next Story