மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thuggery law was passed on the young man arrested in Pokso

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போக்சோவில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமம் காமராஜர் நகரை சேர்ந்த பழனிவேலின் மகன் மணிகண்டன்(வயது 23). இவர் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர். இந்நிலையில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டு மணிகண்டனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவி மீது தாக்குதல் வாலிபர் கைது
கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்- மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. வாலிபரை தாக்கிய முதியவர் கைது
வாலிபரை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
3. இந்தியில் திட்டியதால் ஆத்திரம்: நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது
மது அருந்தும் போது ஏற்பட்ட வாய்த்தகராறில் இந்தியில் திட்டியதால் ஆத்திரமடைந்த வாலிபர் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்தார்.
4. பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் படுகாயம்
பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் விழுந்து படுகாயம் அடைந்தார்.
5. மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த வாலிபர் சாவு
லாரி மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை